Seiten

Donnerstag, 16. September 2010

கவிதைகள் - மழலை தரும் இன்பம்

நினைக்கும் பொழுது இனிக்கும் சிறுமதலை
நெஞ்சை நிறைக்கும் துயரை ஒழிக்கும் ,
தலையசைத்து கைவீசி கவலை மறைக்கும் ,
தன்னை மறந்து மனம் இனிக்க வைக்கும் மதலைசெல்வம்!

சின்ன பூ கை வீசி சிரிக்கும் போதில்
தென்னம்பூ பல்வரிசை சிந்தை நிறைக்கும் ,
மின்னல் ஒத்த கண் ஒளியும் சின்ன மூக்கும்
கன்னல் வெல் சொல்லின் கனிவும்
களிப்பூட்டும் மதலைக்கு மட்டும் சொந்தம் !

புளிக்கும் புளியங்காய் புசிக்கும் மனிதன்
புன்னகைக்க சிரிப்பை அள்ளித்தரும் !







Keine Kommentare: