மின்னும் முத்தும் மணியும் மீனும்
மிக நிறைந்த கடல் சூழும் எங்கள் நாடு
விளைபொருள் வளங்குன்றா வீடு தோறும்
வையமதில் புகழ் மிக்க வரலாறும்
வளையா நெறி வாழும் மக்கள் பண்பும்
வலு மிக்க வன்னி மன்னன் பண்டார வன்னி நாடும்
வரலாறு கொண்ட எங்கள் நாடாம் !
நித்தம் நித்தம் தொழில் நிறைந்த இந்த நாடு
நெய்தலும் மருதமும் கை கோத்த மாட்சி
பித்தம் பிடிக்கும் அதன் பேரின்பம்!
பிறந்த பொன் நாட்டில் அன்றி வேறு எங்குண்டு?
கண்டாரும் கதை கேட்டு கொண்டாரும்
கட்டபொம்மன் பண்டாரவன்னி நட்பின்
எட்டு திசை எட்ட எடுத்து கூறாமல் எப்படிஇருப்பார் ?
கொண்டா டி மகிழ்வுற்று பெருமை காண்பர் !
மண்டியிட்டு தலை வணங்காது மறக்குல மன்னன் ,
வண்டாடும் வன்னி மலர்ச்சோலை நாட்டின் வீரன் !
சண்ட்டளர் சதியாளர் கூட்டம் செய்த சதியால்
அக்டோபர் முப்பதொன்று ஆயிரத்து எண்ணுற்று பதின் ஒன்றில்
ஆங்கிலர் ஆட்சியில் வீழ்ச்சி ஆனான் !
நெடுங்காடு வளம் கொண்ட எங்கள் நாடு,
நடுங்கா புகழ் படைத்த அன்னை மண்ணில் ,
நெடுங்காமம் வரை நீண்ட பெரு நிலத்தில் ,
கண்டாரும் நடுங்க படை கொண்ட பண்டார வன்னி முன்
கைலாய வன்னி ஆண்ட எம் பூமி !
Abonnieren
Kommentare zum Post (Atom)

1 Kommentar:
vaazhthukkal.
mail mUlam thodarpaip pENalaamE.
vanakkaththudan,
mullaiamuthan,
mullaiamuthan@gmail.com
0044.0208.5867783
Kommentar veröffentlichen