கண் பூத்த வேளையில் கவலை மட்டும்
பொன் போன்ற மண்ணிலே பொய்ம்மை காட்டும்,
விண் பூத்த வானத்தின் வெளிச்சம் போல ,
மண் பார்த்த மக்களின் மனங்கள் தோறும் !
நீல வானின் கீழ் நீண்ட நிலமெங்கும்
கோல இயற்கை வண்ணம் போல
கால மகள் வரைந்த அந்த எழில் கூடம் ,
சீலம் நிறைந்தது போல சின்ன மழைத்துளிகள்
மாலை ஒளி மறைய கண் மூடும் நேரத்தில்
மண்ணில் வாழும் மனிதன் மயங்கிடும் வேளையில் ,
" மேகத்தில் திரை போட்டு முத்தாக கோடிட்டு ,
மலை முகட்டு உச்சியிலே மத யானை கூட்டம்,
தாகத்தில் நீர் தேடும் தாவியோடும் மான் கூட்டம் ,
தூரத்தில் சிறகு அடிக்கும் சிறு பறவை கூட்டம் ,
வேகத்தில் முகிற் கூட்டம் வேறாகி பிரியும் அந்த நேரம் ,
வையத்து வாழ்க்கையும் இது தான் என்று கூறி ஓடும் !
மோனத்தில் என் எண்ணப் பறவையும் உள்ளத்தில்
கணத்தில் கனவாகி காலத்தின் புதுமை காட்டும் !
Abonnieren
Kommentare zum Post (Atom)

Keine Kommentare:
Kommentar veröffentlichen