முத்தும் மணியும் மீனும் மிக நிறைந்து
சூழும் கடல் கொண்ட எங்கள் நாடு,
விளை பொருள் பலவும் வளங்குன்றா வாழ்வும்
வையமதில் புகழ் மிக்க வரலாறும்
வளையா வாழ்க்கை பண்பாடும் கொண்டு
வன்னி மண்ணில் வாழ்ந்த பண்டார வன்னிமன்னன்
குறையாத கதை என்றும் நிலைத்த ஒன்று ,
கண்டாரும் அவன் கதை கேட்டுக் கொண்டாரும்
கடட்ட பொம்மன் பண்டரவன்னியன் நட்பு
கொண்டாடி மகிழ்வுறுவர்,பெருமை காண்பர்,
கை வாளின் வீச்சு கலைக்கு ஒருவன் அவன் என்பர் ,
சண்டாளர் கூட்டம் சிதைந்து ஓட வைத்தான் ,
சதி காரர் கும்பல் பகை வீழ செய்தவன் ,
வண்டாடும் மலர் சோலை வன்னி நாடு ,அவன்
வீர வரலாறு கொண்டாடி மகிழ்வர் என்றும் !
நெடுங்காடு நிறைந்த வளம் கொண்ட வன்னி நாட்டின்
நடுங்காப் புகழ் படைத்த ஆங்கில ஆட்சியரை ..........
Abonnieren
Kommentare zum Post (Atom)

Keine Kommentare:
Kommentar veröffentlichen