Seiten

Donnerstag, 16. September 2010

ஈழவள நாடு -கவிதை -4

அலை பாயும் ஆழகடல் சூழ் யாழ் குட நாடு
அரசமர்ந்த பலரில் சங்கிலிகுமாரன் வரை ,
ஆண்டு பலகொண்ட தமிழ் வீடு!
சதி ராடும்கொடிபடரும் கடு சார் பூமி ,
சிங்கரா எழில்சேர சிறந்த வன்னி நாடு,
புதிரோடு தமிழரசு கண்ட கண்டி அரசன் ,
புவியாண்ட மன்னன் ராசசிங்கன் பெயரன் ,
கதிர் ஆட கண்கவரும் சிகிரியா மலை முகடு ,
கலை அழகு மிக்க ஓவியங்கள் உண்டு!
உதிராத நெற்கதிர்கள் மலைபோல குவியும்
உணவுக் களஞ்சியம் மட்டு நகர் பட்டிபளை அறு!

நெய்தலும் மருதமும் கைகோர்த்து நிக்கும் ,
நெல் மணி மீன் மிதமாக கிட்டும் ,
செய் தொழில் வளம் சேர்க்கும் சீர்மிகு பூமி ,
செம்மலை அலம்பில் தென்னமர வாடி,
பொய் இல்ஆ பெரு நிலம் முல்லையின் அங்கம்!
புகை இலை வெங்காயம் மிளகாய் பொலிந்து விளையும் ,
தொய்விலா பலன் தரு தொழில் சார் பூமி !
தொகை மிகு வளம் சேர் நம் நாடு !

Keine Kommentare: