Seiten

Donnerstag, 16. September 2010

ஈழ வளநாடு -3

மின்னும் மணியும் வெண்முத்தும் சங்கும்
நண்ணும் நளிநீர் நிலைகளும் சேர விளங்கும் நிலம்
தாங்கும் வங்கக் கடலுடன் நீளும் இந்துமா மத்தியில்
தங்க மாங்கனி போன்று திகழும் இந்த நம் ஈழவள நாடு காண்!
நீர மகிளிர் முழு நிலவில் நீந்தும் மட்டு வாவி தனில்
தேரா தொன்மை கதை ஒன்று தெரிந்தவர் கூறும் மரபினில்
தென்துறை வாவி பாயும் புதுமை ஒன்று உண்டு என்பர் !
முன்னவர் கதையும் பொய்யல்ல மட்டுநகரின் வரலாறும் !

மலை நாடு வளமாகும் மலைக்க செய்யும்
மன்னாரில் கடல் முத்து மாதோட்ட வரலாறு மலைக்கவைக்கும்,
நிலையான நீர் ஊற்று மாவலி நீள் ஆறு ,
நினைவு ஊட்டி சங்கமிக்கும் திருமலை துறையில் ,
சதிராடும் கொடி படரும் காடுசார் பூமி ,
சிங்கரா எழில் சேர்ந்த வன்னி பெருநிலமும் ,
புதிரோடு வரலாறு கூறும் புவி ஆண்ட கண்டி அரசும்
கதிராடும் கண்கவரும் சிகிரி மலை முகடும் .
கலை அழகு மிளிரும் ஓவியங்கள் கொண்ட இந்த நாடு !
உதிராத நெற்கதிர்கள் மலை போல குவியும்
உணவுக் களஞ்சியம் மட்டுநர் பட்டிப்பளை ஆறு !

Keine Kommentare: