Seiten

Freitag, 12. August 2016

நெஞ்சம் மறப்பதில்லை -23 ம் வருட நிறைவு நாள் -18.8.1993 -12.8.2016- பன்னாட்டு ,உலகத் தமிழுறவு 3ம் மாநாடு , பெர்லின் ,ஜெர்மனி

குணச்சித்திரம் - எண்பது - 1936-2016


எதிர் வரும் 26.09.1936 ம்  நாள் , என் தாயாரின்  கருவறையை  விட்டு  ,
மண் னில்  வீழ்ந்த நாள் - எனது  பிறப்பு ,நான்  அறியாது ம்,பின்  அறிவறிந்து 
தெரிந்த  நாள் ,என்று கூறுவதே  பொருத்தம் . பிறந்து ,விழி  திறந்து  ஒளி 
காண  ,எதையும்  காண முடியாவிட்டாலும்  , முலை அருந்தி பசிதீர்த்த தாய் 
முகம்  பார்க்க தெரிந்திருக்கும்  ,என்று ம் , தந்தை தாய் ,தாய் மாமன் , முகங்கள்  , தெரிந்தான் ,குழந்தை  என்று ,அன்று பாட்டி ,பூட்டி  மார்கள்  கூறும் கதை என்பதை  கேட்டிருப்பேன் .தாய் ,பின்னர் தந்தை ,சொந்த ம் ,உறவு ,அன்று  ,பரந்த பரப்பில்  , திளைத்து  வளர்ந்திருக்கும்  ,காலமாக இருந்தது ,
என்பதை  ,எண்ணும்  ,வயது , அறிந்த  பருவம் ,எல்லோரையும்  போல ,
 எண்ண  ம்  ,எனக்கும்  ஏற்பட்டிருக்கும் .

குழந்தை  பருவம்

உலகம்  புரியா  பருவம் , உணர்வு  அறியா  விட்டாலும்  ,குறைந்த து ,
சில  தேவைகளை .இயல்பாக ,பிறர்  அறிய ,புரிய வைக்கும்  வரம் 
இயற்கை  தந்தது ,என உடல் ,உள்ளம் , உதவும் ; புரியா  உலகம் ,
புரிய தொடங்கும் நேரம் ,அறிவு  உதவா  விடத்து  , முயன்று  ,உலகம் 
சூழல் ,தெரிய  , முயல்வது  ஒன்றும்  புதியதல்ல ,என்றாலும் , குழந்தை 
பிள்ளை பருவத்தில் ,நிகழும் வளர்ச்சி ,மாற்றம் ,அனைத்தையும் ,நன்றாக 
முதலில்  தாயால் மட்டுமே புரிய முடியும் !
குழந்தை பருவத்திலும் ,வளரும் பிள்ளை பருவத்திலும் ,தாய் ,தந்தை ,பின்னர் 
ஆசிரியன் , உறவு ,நட்பு ,முறையினர்  , உதவிடும் போது ,அறிவை  பெறவும் 
முடிகிறது !
குழந்தை  ,பிள்ளை ,பருவங்களில் , மனிதன் அறிவை அதிகமாக பெற்று 
தன்  வாழ்க்கை பாதை ,எப்படி  அமைப்பதென்பதை  புரிந்தாலும் ,பின்னரும் 
அதனை ,தன்  விருப்பு ,வெறுப்புக்கு ஏற்ப  மாற்றுகிறான் !இதற்கு அடிப்படை 
அவன் பெறும்  கல்வி ,உலக அறிவு  , செயல் ,விருப்பு ,ஒழுக்கம் , சூழல் 
என கூறலாம் !

 

Keine Kommentare: