எல்லோரும் இதயத்தில் எண்ணி துயர் கொண்டாலும்
பல்லோரும் பார்த்து புரிந்த பொல்லா நாட்கள் நினைவை
வென்று வரும் செய்தி இன்று இல்லாத ஒன்று உண்மைதான் ,
நன்று ,நன்று ,இன்று ,ஆனாலும் நாளை என்று,அந்த வேளை வரும்
மன்று ஒன்றில் கூடும் ,நீதி தேவன் , நமக்கு தரும் தீர்ப்பு காத்திருப்போம் !
கண்ணால் கண்டோம் ,காதால் கேட்டறிந்தோம் , கதை கள் பல படித்தோம் ,
முன்னால் புரிந்த வற்றை முறை யாக தெரிந்து கொண்டால் உலகம்
வழங்கும் கூலி யாருக்கு என்பதையும் நாம் அறிவோம் ,நாளை அந்த வேளை !
Donnerstag, 28. Oktober 2010
Mittwoch, 6. Oktober 2010
என் பாட்டு இன்று -1
கண் பூத்த வேளையில் கவலை மட்டும்
பொன் போன்ற மண்ணிலே பொய்ம்மை காட்டும்,
விண் பூத்த வானத்தின் வெளிச்சம் போல ,
மண் பார்த்த மக்களின் மனங்கள் தோறும் !
நீல வானின் கீழ் நீண்ட நிலமெங்கும்
கோல இயற்கை வண்ணம் போல
கால மகள் வரைந்த அந்த எழில் கூடம் ,
சீலம் நிறைந்தது போல சின்ன மழைத்துளிகள்
மாலை ஒளி மறைய கண் மூடும் நேரத்தில்
மண்ணில் வாழும் மனிதன் மயங்கிடும் வேளையில் ,
" மேகத்தில் திரை போட்டு முத்தாக கோடிட்டு ,
மலை முகட்டு உச்சியிலே மத யானை கூட்டம்,
தாகத்தில் நீர் தேடும் தாவியோடும் மான் கூட்டம் ,
தூரத்தில் சிறகு அடிக்கும் சிறு பறவை கூட்டம் ,
வேகத்தில் முகிற் கூட்டம் வேறாகி பிரியும் அந்த நேரம் ,
வையத்து வாழ்க்கையும் இது தான் என்று கூறி ஓடும் !
மோனத்தில் என் எண்ணப் பறவையும் உள்ளத்தில்
கணத்தில் கனவாகி காலத்தின் புதுமை காட்டும் !

Abonnieren
Kommentare (Atom)