Seiten

Montag, 15. August 2016

குணச்சித்திரம் (2)

                                           குணச்சித்திரம்  (2)

மண் குடிசையில் ,பிறந்து ,ஓலை  வேய்ந்த ,எனது  கிராம  தமிழ்  ,கிறீஸ்தவ 
கலவன் பாடசாலையில் ,1941 முதல் 1949 வரை ,தமிழ் அரிச்சுவடி  முதல்  
5ம்  வகுப்பு  வரை ,இரண்டாம்  உலக போர்  சூழலில் ,உணவு ,உடை பஞ்சம் 
ஏற்பட  , கல்வி  கற்றலில்  தடை  ஏற்பட்டு ,கற்ற பின்னர் , 1950 முதல் ,கோப்பாய்  ,கிறீஸ்தவ கல்லூரியில்  , ஆங்கில மொழியில் , ஓரிரு  தமிழ் 
பாடங்கள் நீங்கலாக  ,7 ஆண்டு ,கற்று ,கல்லூரி வாழ்க்கை  பெற்று  பெற்றது .

கல்லூரி ,வாழ்க்கை கற்று தந்து ,பெற்றுக்கொண்ட அறிவும் ,அங்கு கிடைத்த அனுபவங்கள் ,நட்பு  , மாணவ -ஆசிரிய உறவு , தந்த  வாழ்வியல்  தேடல்கள்
என்பதே  ஒரு மனிதனின்  வெளியுலக  வாழ்வுக்கு  அடித்தளமாக  அமையும்-
அமைந்ததென்பதை  எவருமே ,தத் தமது வாழ் வரை மறந்திட முடியாது .
அதனை  தவற விடும் எவரும் , பின்னாளில்  அவற்றின்  அருமையை  ,அதன்
தேவையை எண்ணி  வருந்தாமல்  இருக்க மாடடார்கள் ,என்று கூறிவிடலாம் .

தொடக்கப் பள்ளியில் , பாலர் பிரிவில் ,தமிழ் அரிச்சுவடி கற்று தந்த ,அனைவரையும் ,இன்றும் ,மனதில் நினைத்து , 75 ஆண்டுகள் தாண்டியும்
நினைவு கொள்வது  , மிக மகிழ்ச்சி தருவதாகும் .ஞானம்மா ,ஜேசுமணி ,தங்கம்மா ,சின்னப்பா ,சதாசிவம் , பசுபதி ,ராஜரத்தினம் , கனகரத்தினம் ,
போன்றோர் ,நெஞ்சில்  என்றும்   நிலைத்தவர்களே  ! அன்று ,தினமும்
பாடங்கள்  தொடங்குமுன்னர்  காலையில் , ஆத்திசூடி ,கொன்றைவேந்தன் ,
நல்வழி ,போன்ற நீதி மொழிகள் அனைவரும் பாடியே ,தொடங்கும் .

கல்லூரி வாழ்க்கை

இருபாலாரும் , ஒன்றாக  ,வகுப்புகளில்  ,கற்ற கல்லூரி , நாட்கள்  , பெண்கள் ,ஆண்கள் , ஒற்றுமையாக , மதித்து , ஒழுக்கம் பேணி ,இருந்த ,இனிய  அனுபவம் ,வெளியுலக வாழ்க்கையிலும் தொடர் பண்பாக இருந்ததென்பது
அங்கு  கற்ற இருபாலாரும் நன்கு அறிவார்கள் .ஒருவரின்  பிற்கால வாழ்க்கையின் பயிற்சிகளமாக கல்லூரி  வாழ்வு  ,அமைகின்றதென்பதும் ,
பின்பு ,உயர்கல்வி ,வெளியுலகம் ,குடும்பம் ,நட்பு ,என ,விரிந்து  நின்று
நிலைப்பதற்கும் , பண்படுகிறதென்பது ,கண்டறிந்த  உண்மை ஆகும் .எனது
கல்லூரி வாழ்வில் , கற்று  தந்து ,நட்புடன் , உறவாடி , ஊக்கம்  அளித்து  ,உணர்வூட்டி ,வழிகாட்டிய ,பலரில் ,இன்றும்  நினைவில் வாழும் ஆசிரியப்  பெருமக்களை ,நினைத்து  மகிழ்வதுண்டு . தமிழ் மொழி  கற்று தந்த பண்டிதர் ,வட  கோவை ,கந்தையா ,வல்வை  ,வீர்கதிப்பிள்ளை ,பருத்தித்துறை  சேவல் கொடியோன் ,திருமதி குமாரசாமி , ஆசிரியர் அறியரத்தினம் , அற்புதராஜா ,செல்வம் செல்லையா ,செல்வநாயகம் , அறிவியல் /கணிதம்  புகட்டிய ,கேரள  நாட்டினர் ,பி .எம் வர்கீஸ் ,திருமதி கள்  ஜான் ,சக்கராய  போன்றோரின் பாடம்  புகட்டிடல் ,என்றும்  ,வியக்க  வைக்கும் ! அதே போன்று ,ஆங்கில ஆசான்கள்
ஏ .ஆர் ,ராசையா ,ஆதிபர்கள் ,டீ ,ஜெ ,தம்பாப்பிள்ளை ,எ .டபுள் .ராசசேகரம் ,மிஸ் சீஸ்  நவரத்தினம் ,மிஸஸ்  வில்லியம்  , சின்னையா  ,ஜீ .ஏ .நைல்ஸ் ,
போன்றோரும் நினைவில் உள்ளவர்களே ! எனது கல்லூரி வாழ்க்கை ,நிறைவுறும் வேளையில் ,புதிய அதிபராக ,பதவிஜேற்ற  ,நவரத்தினராசா
அவர்களும் ,சிறந்த ஆங்கில  புலமை பெற்றவர் ,என்பதும் குறிப்பிடத்தக்கது .

உலகமும்  வீடும்
இந்த  , விரிந்த உலகமும் , அதில்  வாழும் உயிர்களும் ,எத்தனை  வகைகள்
இருந்தன ,இன்று அழிந்து மறைந்த சீவராசிகள் ,அவைகளில்  விலங்கு ,பறவை ,ஊர்வன ,பறப்பன ,நீர்  வாழ் உயிரினங்கள் ,மனித  இனங்களும்
மறைந்து கொண்டிருப்பதாக ,கூறுகிறார்கள் ; அதுமட்டுமன்றி ,அவர்களின்
வாழ்வியல் , கூறுகளும்  கூடவே ஒழிந்து  போவதாக கணிக்கப்படுகின்றது
குறிப்பாக ,மொழி ,பண்பாடு ,வாழ் நிலம் என ,இல்லாது போகின்றதை  ,புள்ளிவிபரங்கள்  மூலம் அறிய முடிகின்றது .தனி ஒரு மனிதன் அடையாளம்
அழிந்து போகிறதென்றால் ,உலகில் ஒரு  இனத்தின்  அடையாளம் ,இல்லாது
போகிறதென்பதே  உண்மை .


Freitag, 12. August 2016

நெஞ்சம் மறப்பதில்லை -23 ம் வருட நிறைவு நாள் -18.8.1993 -12.8.2016- பன்னாட்டு ,உலகத் தமிழுறவு 3ம் மாநாடு , பெர்லின் ,ஜெர்மனி

குணச்சித்திரம் - எண்பது - 1936-2016


எதிர் வரும் 26.09.1936 ம்  நாள் , என் தாயாரின்  கருவறையை  விட்டு  ,
மண் னில்  வீழ்ந்த நாள் - எனது  பிறப்பு ,நான்  அறியாது ம்,பின்  அறிவறிந்து 
தெரிந்த  நாள் ,என்று கூறுவதே  பொருத்தம் . பிறந்து ,விழி  திறந்து  ஒளி 
காண  ,எதையும்  காண முடியாவிட்டாலும்  , முலை அருந்தி பசிதீர்த்த தாய் 
முகம்  பார்க்க தெரிந்திருக்கும்  ,என்று ம் , தந்தை தாய் ,தாய் மாமன் , முகங்கள்  , தெரிந்தான் ,குழந்தை  என்று ,அன்று பாட்டி ,பூட்டி  மார்கள்  கூறும் கதை என்பதை  கேட்டிருப்பேன் .தாய் ,பின்னர் தந்தை ,சொந்த ம் ,உறவு ,அன்று  ,பரந்த பரப்பில்  , திளைத்து  வளர்ந்திருக்கும்  ,காலமாக இருந்தது ,
என்பதை  ,எண்ணும்  ,வயது , அறிந்த  பருவம் ,எல்லோரையும்  போல ,
 எண்ண  ம்  ,எனக்கும்  ஏற்பட்டிருக்கும் .

குழந்தை  பருவம்

உலகம்  புரியா  பருவம் , உணர்வு  அறியா  விட்டாலும்  ,குறைந்த து ,
சில  தேவைகளை .இயல்பாக ,பிறர்  அறிய ,புரிய வைக்கும்  வரம் 
இயற்கை  தந்தது ,என உடல் ,உள்ளம் , உதவும் ; புரியா  உலகம் ,
புரிய தொடங்கும் நேரம் ,அறிவு  உதவா  விடத்து  , முயன்று  ,உலகம் 
சூழல் ,தெரிய  , முயல்வது  ஒன்றும்  புதியதல்ல ,என்றாலும் , குழந்தை 
பிள்ளை பருவத்தில் ,நிகழும் வளர்ச்சி ,மாற்றம் ,அனைத்தையும் ,நன்றாக 
முதலில்  தாயால் மட்டுமே புரிய முடியும் !
குழந்தை பருவத்திலும் ,வளரும் பிள்ளை பருவத்திலும் ,தாய் ,தந்தை ,பின்னர் 
ஆசிரியன் , உறவு ,நட்பு ,முறையினர்  , உதவிடும் போது ,அறிவை  பெறவும் 
முடிகிறது !
குழந்தை  ,பிள்ளை ,பருவங்களில் , மனிதன் அறிவை அதிகமாக பெற்று 
தன்  வாழ்க்கை பாதை ,எப்படி  அமைப்பதென்பதை  புரிந்தாலும் ,பின்னரும் 
அதனை ,தன்  விருப்பு ,வெறுப்புக்கு ஏற்ப  மாற்றுகிறான் !இதற்கு அடிப்படை 
அவன் பெறும்  கல்வி ,உலக அறிவு  , செயல் ,விருப்பு ,ஒழுக்கம் , சூழல் 
என கூறலாம் !